Saturday, December 15, 2018

தமிழ் இலக்கியத்தில் அறிவியல் சிந்தனைகள்” பன்னாட்டுக் கருத்தரங்கம்



பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் “தமிழ் இலக்கியத்தில் அறிவியல் சிந்தனைகள்” பன்னாட்டுக் கருத்தரங்கம்

பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறையும் சதக்கத் ஆய்விதழும் இணைந்து 18.12.2018 செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் “தமிழ் இலக்கியத்தில் அறிவியல் சிந்தனைகள்” பன்னாட்டுக் கருத்தரங்கத்தை நடத்துகின்றன. 

தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் ச.மகாதேவன் வரவேற்றுப் பேசுகிறார். ஆய்வாளர்கள் எழுதிய 400 பக்கஅளவிலான ஆய்வுக்கட்டுரைகளின் தொகுப்பு நூலான அறிவியல்தமிழ் ஆய்வுக்கோவையை கல்லூரித் தாளாளர் அல்ஹாஜ் த.இ.செ.பத்ஹூர் ரப்பானி வெளியிட அதன் முதல் பிரதியை கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினி பெற்றுக்கொண்டு தமிழ்க் கவிதைகளில் அறிவியல் சிந்தனைகள் எனும் தலைப்பில் சிறப்புரையாற்றுகிறார். 

நெய்தல் ஆய்வாளரும் பேராசிரியருமான முனைவர் வறீதையா கான்ஸ்தந்தின் “இயற்கை – திணை: அறிவியல் பார்வை” எனும் பொருளில் தொடக்கவுரையாற்றுகிறார். இலங்கையைச் சார்ந்த  மருத்துவ அலுவலர்கள் முருகமூர்த்தி துஷியந்தன், துஷியந்தன் கலைச்செல்வி துஷியந்தன் ஆகியோர் “அறிவியல் பார்வையில் தமிழ் மருத்துவம்” எனும் தலைப்பில் நோக்கவுரையாற்றுகிறார்கள். முதல் அமர்வில் இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களில் அறிவியல் பார்வை எனும் தலைப்பில் ரஹ்மத் ராஜகுமாரன்,மாயமெய் தொழில்நுட்பமும் அறிவியல் தமிழும் எனும் தலைப்பில் முனைவர் மு.முகமது சாதிக், அண்மைக்கால அறிவியல் ஆய்வுகள் எனும் தலைப்பில் முனைவர் சே.மு. அப்துல் காதர் ஆகியோர் ஆய்வுரைகள் வழங்குகின்றனர். 

சென்னை கிறித்தவக் கல்லூரித் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் சதாசிவம் பழந்தமிழரின் அறிவியல் சிந்தனைகளும் தொடர்ச்சியும் எனும் தலைப்பில் நிறைவுரையாற்றுகின்றார். தமிழகம் இலங்கை சார்ந்த பேராசிரியர்கள் ஆய்வு மாணவர்கள் கலந்துகொள்கின்றனர்.